சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

586 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  அணி அணிந்தார்- மெய்ப்படுத்தார்-எனவும்,
இயம் இயம்பினார்- படுத்தார்- எனவும்,
படை வழங்கினார்- தொட்டார்- எனவும்,
சோறும் கறியும் அயின்றார் எனவும்,
யாழும் குழலும் இயம்பினார் எனவும்,
 

 
பொதுவினையால் கூறப்பட்டவாறு காண்க.
 
  அடிசில் தின்றார்- பருகினார்- எனவும்,
அணி கவித்தார்- பூண்டார்- எனவும்,
இயம் கொட்டினார்- ஊதினார் எனவும்,
படை எறிந்தார்- எய்தார்- எனவும்,
சோறும் கறியும் தின்றார் எனவும்,
யாழும் குழலும் ஊதினார் எனவும்

 

ஒன்றற்கு உரிய வினையான் கூறின் மரபு வழுவாம் என்பது அஃதேல்,
 
  ‘ஊன்துவை
கறிசோறு உண்டு வருந்துதொழில் அல்லது’
புறம்.14

 
  ‘உண்டற்கு உரிய அல்லாப் பொருளை
உண்டன போலக் கூறலும் மரபே’
தொல்.பொருள்.213

என்னும் பொருளியல் சூத்திரத்தானும் உண்டல் தொழில் பொதுவினையும் ஆதல்
உணர்க. கறி ஒழித்து ஏனையவற்றிற்கு எல்லாம் உண்டல் தொழில் உரித்து ஆகலின்
பன்மை பற்றிக் கூறினார் எனினும் அமையும்.