சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

588 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

‘அடிசில் தின்று’ என்று செய்யுட்கண் வருவது, உண்பான் மனிதப்பண்பு இல்லனாய்
உடல் ஒன்றனையுமே ஓம்புவானாய் இருத்தல் பற்றி அவனை இழித்துக்கூறற்கண் வந்தது.

மிசைதல்- அயிறல்- என்பன சிறப்புவினை என்பது நச்சினார்க்கினியர் கருத்து.
 

  ‘கடவுள் ஒருமீன் சாலினி ஒழிய
அறுவர் மற்றையோர் அந்நிலை அயின்றனர்’
 

பரிபா. 5-44-45
என்ற இடத்து அயிலுதல் விழுங்குதலையும்,
 
  ‘மூங்கில் மிசைந்த முழந்தாள் இரும்பிடி’
நளிபுகை கமழாது இறாயினிர் மிசைந்து’

‘இடம்படின்
வீழ்களிறு மிசையாப் புலியினும் சிறந்த’
கலி.50-2
மலைபடு.249


அகநா.29

என்புழி மிசைதல் என்பது தின்றலையும் குறித்தலின் அயிலுதல், மிசைதல் என்பன
சிறப்பு வினையேயாம். இவ்வாறு உரைத்தார் நச்சினார்க்கினியர். இந்நூற்பா உரை
பெரும்பாலும் நச்சினார்க்கினியர் தொல்.சொல். 46ஆம் நூற்பா உரையில் சொற்றனவே.
 

ஒத்த நூற்பாக்கள்

  ‘வேறுவினைப் பொதுச்சொல் ஒருவினை கிளவார்.’

‘எண்ணுங் காலும் அதுஅதன் மரபே.’
‘பொதுத் தொழிலை ஒன்றால் புகலார்.’
முழுதும்
‘வேறு வினைப்பல் பொருட்குப் பொதுப்பெயர்
பொதுவினை கொடுத்துப் புகல்வது நெறியே.’

‘எண்ணுழி யும்பொது வினையான் இயலும்.’
தொல்.சொல்.46

47
நே.வி.13
நன்.389

மு.வீ.ஒ.78

79