சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-26,27591

  ‘அவற்றுள்
வினைவேறு படூஉம் பலபொருள் ஒருசொல்
வேறுபடு வினையினும் இனத்தினும் சார்பினும்
தேறத் தோன்றும் பொருள்தெரி நிலையே.’

‘ஒன்றுவினை மருங்கின் ஒன்றித் தோன்றும்
வினைவேறு படாஅப் பலபொருள் ஒருசொல்
நினையுங் காலைக் கிளந்தாங்கு இயலும்.’

‘ஒப்பிகந்த பல்பொருள்மேல் சொல்லும் ஒருசொல்லைத்
தப்பா வினையினம் சார்பினால்........சொல்லுக.’

முழுதும்
‘பலவினைக்கு உரிய பலபொருள் ஒருசொல்
நிலைவரின் உரிமை நீத்தசொல் உரித்தே.’



53 மு.வீ.ஒ.85



54 மு.வீ.ஒ.86


நே.வி.14

நன்.390

தொ.வி.196


தெரித்து மொழிதல்
 

321. குறித்தோன் கூற்றம் தெரித்துமொழி கிளவி.
 

இதுவும் ஒரு மரபு வழுக் காக்கின்றது.

இ-ள்: ஒரு பொருள் வேறுபடக் குறித்தோன் கூற்று ஆற்றல் முதலாயினவற்றான் விளங்காதாயின், அப்பொருளைத் தெரிவித்துச் சொல்லும் சொல்லாகக் கூறுக என்றவாறு.

வரலாறு:

  ‘கலந்தது போல வருமே இலங்குஅருவி
அன்பன் மலைப்பெய்த நீர்’

 

எனத் தெரித்து மொழியாக்கால் வழுவாம் ஆதலின்,