சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

592 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘அரிதாரச் சாந்தம் கலந்தது போல
உருகெழத் தோன்றி வருமே- முருகு உறழும்
அன்பன் மலைப்பெய்த நீர்’
 

 
எனத் தெரித்து மொழிக என்பதாம்.
 
  வடநூலார் இதனை நேயம் என்ப.
‘ஊட்டி அன்ன ஒண்டளிர்ச் செயலை’
அகம்.68

என்புழி இன்னதனை என்று தெரித்து மொழியாமையின் வழுவாம் பிற எனின், உவமை
என்னும் அலங்காரம் ஆயின் அன்றே இன்னது ஒன்றனை என்னல் வேண்டுவது?
செயலை யந்தளிரினது செய்யாத நிறத்தைச் செய்தது போலும் ‘கருத்தினனாகக் கூறலின்,
பிறிது ஓர் அலங்காரமாம். அதனான் அது கடா அன்று என்க.
 
  ‘படுத்துவைத் தன்ன பாறை மருங்கின்
எடுத்துநிறுத் தன்ன இட்டருஞ் சிறுநெறி’
மலைபடு.15,16

என்றாற்போல்வன எல்லாம் இவ்வலங்காரம் பற்றி வந்தன.
 
  ‘பல்லார்தோள் தோய்ந்து வருதலான் பூம்பொய்கை
நல்வயல் ஊரநின் தார்புலால்- புல்எருக்கம்
மாசில் மணிப்பூண்எம் மைந்தன் மலைந்தமையான்
காதற்றாய் நாறும் எமக்கு’

 

எனக்குவளை புலால் நாறுதற்கும் எருக்கங்கண்ணி நறிதாதற்கும் காரணம் கூறாது.
 
  ‘ஒல்லேம் குவளை புலால் மகன்மார்பின்
புல்லெருக்கங் கண்ணி நறிது’

 

என வாளா கூறின் வழுவாம் பிற எனின்,

புதல்வற் பயந்த பூங்குழல் மடந்தை பரத்தையிற் பிரிந்துவந்த கிழவனொடு புலந்து
உரைக்கின்றாள் ஆதலின் குவளை புலால் நாறுதற்கு அவன் தவறு காரணம்
என்பதூஉம், எருக்கங்கண்ணி நறிது ஆதற்கு மகிழ்நன் செய்த தனி கூர்வெப்பம்