நூற்பா தொல்காப்பிய நூற்பா. உரை சேனாவரையர் உரை. அசோகந்தளிரின் இயற்கைச் செந்நிறம் நிறந்தீட்ட வல்லான் ஒருவன் செயற்கையாக நிறம் ஊட்டியதுபோலக் காணப்படுகிறது என்பதும், கீழே கிடக்கும் பாறை ஒருவர் செயற்கையாகக் கீழே கிடத்திவைத்தாற்போலக் காணப்படுகிறது என்றும், மலையின்மேல் ஏறும் வழியை உடையபாறை நேரே செங்குத்தாக நட்டு வைத்தாற்போல உள்ளது என்றும் கூறுவன உவம அலங்காரம் அன்று, வேறோர் அலங்காரம் என்பார் சேனாவரையர்; வேறுபடவந்த உவமத்தோற்’ றத்துள் அடக்கினார் நச்சினார்க்கினியர். |