சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

596 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

‘ஆலாழ்க என்றால், அந்தணர் கெடுக என்றாகாது’ என்பது நேமிநாதச் சொற்படல
10 ஆம் நூற்பா உரை.

‘மேலைச்சேரிக்கோழி அலைத்தது என்றால், கீழைச்சேரிக் கோழி அலைப்புண்டது
என்பது சொல்லாமல் முடிந்தது. இஃது அருத்தாபத்தி’ என்பர் நேமிநாத உரையாசியர்.
(சொல்.10) இதனையும் நச்சினார்க்கினியர் எடுத்துக்காட்டாகத் தந்துள்ளார்.

குடம் வீழாமலேயே குடஞ்சுமந்தான் விழுதலும் உண்டு என்பது.
 

  ‘போதரா நின்றபோது புலர்ந்துகால் தளர்ந்து தப்பி
மாதரார் வருந்தி வீழ்வார் மட்கலம் மூடுகையால்
காதலால் அணைத்தும் எல்லாம் கமரிடை சிந்தக் கண்டு’

 

என்ற பெரியபுராண அரிவாட்டாயநாயனார் புராணப் பாடல் (15) அடிகளானும்
உணரலாம்.

நன்னூலார் அடைமொழி இனத்தைத் தருதலோடு இனம் அல்லதனையும் தரும்
என்று குறிப்பிட்டுள்ளார். அதனையும் நோக்கி உணர்க.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  முழுதும்
‘..............சொன்னமொழி தன்னினத்தை
உன்னி முடித்தலும் உண்டு.’
‘அடைமொழி இனமல் லதும்தரும் ஆண்டுறின்.’

‘எடுத்த மொழிஇனம் இயம்பலும் உரிய.’
தொல்.சொல்.60

நே.சொல்.10
நன்.402

மு.வீ.ஒ.91


ஒருபெயர்ப் பொதுச்சொற் கிளக்கும் முறை
 

323. ஒருபெயர்ப் பொதுச்சொல் உள்பொருள் ஒழியத்
தெரிபுவேறு கிளத்தல் தலைமையும் பன்மையும்
உயர்திணை மருங்கினும் அஃறிணை மருங்கினும்.