என்பது திருத்தொண்டர் புராணம்.இனி, கடகத்துள் வயிரமேயன்றிப் பிறவும் உண்மையான், வயிர கடகம் என்பது தலைமை பற்றிய வழக்கு. பெருவிறலுக்கு வெண்குடையே யன்றி வீதிஉலா வருங்கால் கவிக்கப்படும் பொற்குடை முதலியனவும் உண்மையான், வெண்குடைப் பெருவிறல் என்பது தலைமை பற்றிய வழக்கு. மாடு மேயும் இடத்தில் ஆடு முதலியனவும் மேய்தலானும், மாடு உராய்ந்துகொள்ள நட்ட தறியில் ஏனைய விலங்குகளும் தினவு தீர உராய்ந்து கொள்வது கூடும் ஆதலானும், காளைகளுக்கு அமைந்த இடத்தில் பசுக்களும் கட்டப்படலாம் ஆதலானும், ஆனதர்- ஆதீண்டு குற்றி-எருத்தும்- என்பனவும் தலைமை பற்றி வந்தன. |