இஃது இருதிணை இருபாற்கும் பொது ஆகிய பெயர்க்கண்ணது ஒரு மரபு வழுக் காக்கின்றது. இ-ள்: உயர்திணைக் கண்ணும் அஃறிணைக் கண்ணும் பெயரினானும் வினையினானும் பொதுமையின் பிரிந்து ஆண்மைக்கும் பெண்மைக்கும் உரியவாய் வருவன எல்லாம் வழு ஆகா, வழக்கின்கண் அடிப்பட்டன ஆகலான் என்றவாறு. உயர்திணைக் கண்ணும் அஃறிணைக் கண்ணும் என்பது அதிகாரத்தான் வந்தது. |