உரை சேனாவரையர் உரை. இரட்டைகிளவி ஒருசொல் குறைச்சொல்லாகவும் ஒரு சொல் முழுச்சொல்லாகவும் பிரிக்க இயலாத அளவில் அமைந்த குறுகுறுத்தது என்பதுபோலவும், குறைச்சொல் இரண்டு பிரிக்க முடியாதவாறுசேர்ந்த குறுகுறு நடந்து, புறம்.188 என்பது போலவும் இருவகையாகவரும். குறு குறுத்தது என்பது மிகவும் குறுகியது என்று பொருள்படும். குறுகுறுத்தது என்பது மிகவும் குறுகியது என்று பொருள்படுங்கால், குறுத்தது என்பது குறுகியது என்று பொருள்படவே குறு என்பது தனிச்சொல்லாயின் மிகுதியாக என்று பொருள்படுதல் வேண்டும். அங்ஙனம் பொருள் தாராமையின் இரட்டைக்கிளவி பிரிக்கமுடியாத ஒற்றைச் சொல்லேயாம். இஃது இலைஇரட்டை பூஇரட்டை போல்வது. இரட்டைக் கிளவி இரு குறைச் சொற்களாகவோ ஒரு குறைச்சொல்லும் ஒரு முழுச் சொல்லுமாகவோ பிரிக்க முடியாத வகையில்இரண்டாகவே இணைந்து, இசை-குறிப்பு- பண்பு- என்றபொருள்களிலேயே வரும். ஆனால் அடுக்குத் தொடர் ஒரு முழுச் சொல் இரண்டு முறையோ மூன்று முறையோ விரைவு- பன்மை-தெளிவு- அச்சம்- விருப்பமின்மை- வருத்தம்- உடன்பாடு- முதலியபொருள்களில் அடுக்கியும், செய்யுளில் இசை நிறைததற்கு நான்குஎல்லை காறும் அடுக்கியும் பிரிக்கக்கூடிய நிலையில் மக்கள். இரட்டை விலங்கு இரட்டை போல அமைந்திருக்கும். இவ்வேற்றுமைஅறிக. இவ்வியலுள் இதுகாறும் தொல்காப்பியக் கிளவியாக்கம் சுட்டும்வழாநிலை வழுவமைதிகள் உரைக்கப்பட்டன. இனி |