இத்துணையும் வழுவற்க எனவும் வழீஇ அமைக்க எனவும் காத்து வழுக்களைந்து சொற்களை அமைத்துக்கொண்டு, இனி முற்கூறிய நால்வகை ஓத்தினுள்ளும் கூறுதற்கு இடம் இன்றி எஞ்சி நின்றன கூறுவான் புகுந்தன வற்றுள் இதுசெய்யுள்இடத்துப் பெயர்வினை பற்றி நிகழ்வது ஓர் ஒழிபுகூறுகின்றது. இ-ள்: பெயர்வினைகளின் ஈற்றில் நின்ற னகர ளகர ரகரயகரங்களின் அயல் ஆகாரம் ஓகாரம் ஆகவும் பெறும்செய்யுட்கண் என்றவாறு. |