32ஆம் நூற்பா முதல் இவ்வியல் முடிவுகாறும்கூறப்படுவன தொல்காப்பிய எச்சவியல் முதலியவற்றின்செய்திகளாம். ஆகாரம் ஓகாரமாவன ஆன், ஆள், ஆர் என்றபடர்க்கை விகுதி பெற்ற பெயர் வினைகளும் ஆய் என்றமுன்னிலை விகுதி பெற்ற பெயர் வினைகளுமாம். இவற்றுள் பெயர் பற்றியனவற்றைப் பெயரியலுள்ளும், வினைபற்றியவற்றைவினையியலுள்ளும் தொல்காப்பியனார் குறிப்பிட்டுள்ளார். இவர்அவற்றை நன்னூலார் போலப் பெயர் வினை இரண்டற்கும்பொதுவான பொதுவியலுள் குறிப்பிடுகின்றார். வில்லான். தொடியாள், நல்லார், முன்னியார் செப்பாதாய்என்ற பெயர்களின் ஈற்றயல் ஆகாரம் ஓகாரம் ஆயினவாறு. |