நிற்றந்தான், பெயர்ந்தாள், காடு இறந்தார், வந்தாய்என்ற வினைகளின் ஈற்றயல் ஆகாரம் ஓகாரம் ஆயினவாறு.இங்ஙனம் திரிதல் எல்லாச் சொற்களுக்கும்பொருந்துவதன்று முதலியனவும், கிழவன் என்ற அன் ஈறும்சிறுபான்மை கிழவோன் என ஓன்ஈறு ஆதலும் உண்டு என்பதும் விளக்கப்பட்டன. பிறவும் வந்துழிக் காண்க என்பதனானே, அழாஅன்இழாஅன் என்னும் அளபெடைப் பெயர் அளபெடுத்தால் ஆஓஆகா என்று நச்சினார்க்கினியர் கூறியதும் (தொல்.சொல்.188)கொள்க. ஆம்ஈறு வந்தோம்- சென்றோம்- என்றாற்போலஓம்ஈறு ஆயிற்று என்று கொள்ளுதல் கூடாது. ஓம்ஈறு ஆம்ஈற்றின் திரிபு அன்று, ஏம் ஈற்றின் சிதைவு என்பதுசேனாவரையர் நச்சினார்க்கினியர்தம் கருத்தாகும். ஆய்ஈறு ஓய்ஈறு ஆவது உயர்திணைக்கண்ணேயே அமையும் என்றகாரணத்தாலேயே முன்னிலை ஒருமை ஈறாகிய ஆய் ஈற்றைத்தொல்காப்பியனார் அதற்குரிய விரவுத்திணை அதிகாரத்து வையாது உயர்திணை அதிகாரத்து வைத்தார் என்பதும் அறிக. இவ்வாசிரியர் ஏற்புழிக்கோடலான் கொண்டதனையும் ஒன்று என முடித்தலான் கொண்டதனையும் நன்னூல்விருத்தியாளர் முறையே உம்மையை எதிர்மறை உம்மையாகவும் ஆக்க உம்மை ஆகவும் ஆக்கிக்கொண்டார். |