இது வேற்றுமைச் சொற்கண்ணும் பெயரெச்சவினையெச்ச வினைச் சொற்கண்ணும் முறையே வழுஅமைத்தலும் எய்தாதது எய்துவித்தலும் பற்றி நிகழ்வோர்ஒழிபு கூறுகின்றது. இ-ள் விதிமுகத்தான் கூறாது எதிர் மறுத்துக் கூறினும்பொருள் நிலை திரியாவாம், வேற்றுமைச் சொல்லும் பெயரெச்சவினைச்சொல்லும் வினையெச்ச வினைச்சொல்லும் என்றுகூறுவர் ஆசிரியர் என்றவாறு. எ-டு: மரத்தைக் குறையான்- வேலான் எறியான்-எனவும், ஓதாப்பார்ப்பான்- வளையாக்கோல்- உண்ணா இல்லம்-உண்ணா ஊண்- உண்ணாக்காலம்- உண்ணாச்சோறு- எனவும், உண்ணாது வந்தான்- உண்ணாமைக்குப் போயினான்-எனவும் வரும். |