உண்ணா என்பது உண்ட- உண்கின்ற- உண்ணும்-என்னும் மூன்றற்கும் எதிர்மறையாம்- உண்ணாத என்பதும்அது. உண்ணாது என்பது உண்டு- உண்ணூ- உண்ணுபு-என்பனவற்றிற்கு எதிர்மறை. உண்ணாமைக்கு என்பதுஉண்ணியர்- உண்ணிய- உணற்கு- என்பனவற்றிற்கும் உண்ணஎனச் செயற்கு என்பது படவரும் செய என் எச்சத்திற்கும்எதிர்மறையாம். உண்ணாமை- உண்ணாமல்- என்பனவும்அதற்கு எதிர்மறையாம். பிறவும் எதிர்மறை வாய்பாடுஉளவேல் கொள்க. குறையான்- எறியான்- என்றவழி வினை நிகழாமையின்மரமும் வேலும் செயப்படுபொருளும் கருவியும் எனப்படாஆயினும் எதிர்மறையும் விதி வினையோடு ஒக்கும் என்பதுநூல் முடிபு ஆகலான், ஆண்டு வந்த உருபும்செயப்படுபொருள் முதலாயினவற்றின்மேல் வந்தன எனப்படும்என வழு அமைத்தவாறும், செய்த செய்கின்ற செய்யும் எனவும் செய்து செய்யூசெய்பு எனவும் பெயரெச்சமும் வினையெச்சமும்விதிவாய்பட்டான் ஓதப்பட்டமையின் ஆண்டுச் செய்யா-செய்யாது என்னும் எதிர்மறை வாய்பாடு அடங்காமையின்அவை எச்சமாதல் பெறப்பட்டின்று ஆதலான், அவையும்அவ்வெச்சப் பொருண்மையில் திரியாது பெயரும் வினையும் கொள்ளும் என எய்தாதது எய்துவித்தவாறும் ஓர்ந்து உணர்க. உண்டிலன்- உண்ணாநின்றிலன்- உண்ணலன்-உண்ணான்- என்னும் தொடக்கத்து முற்றுச் சொல்லும் எதிர்மறுத்து நிற்கும் ஆதலின், பொருள் நிலை திரியாது எனஅதற்கு ஓதார் ஆயினார் என்னை எனின், விதிவினைக்கும்எதிர்மறை வினைக்கும் பொதுவாக ஈறுபற்றி ஓதியது அல்லதுவிதிப்பொருள் ஆகிய வாய்பாடு பற்றி ஓதாமையின் ஆண்டுக்கட்டுரை இல்லை என்க. 33 |