சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

610 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

விளக்கம்
 

வழுவமைத்தல்- வேற்றுமை உபு ஏற்ற சொற்கள்கொண்டு முடியும்
வினைச்சொற்கள் வினைநிகழச்சியேயன்றிவினை நிகழாமையைக் கூறினும் வினைபோலக்
கொள்ளப்படும்அவ்வுருபும் தம்பொருள்நிலை திரியாவாம் என்பது.

எய்தாதது எய்துவித்தல்- வினையெச்ச பெயரெச்ச விதிவாய்பாடுகளேயன்றி
மறைவாய்பாடுகளும் கூறல்.

ஓதாப்பார்ப்பான் முதலிய ஆறும் செய்பவன் கருவிநிலம் செயல் காலம்
செயப்படுபொருள் என்பனவற்றைக்கொண்டு முடிந்த பெயரெச்சங்களுக்கு
எடுத்துக்காட்டு.

உண்ணாது- உண்ணாமைக்கு- என்பன வினையெச்சஎதிர்மறைகளுக்கு
எடுத்துக்காட்டு.

செய்யா என்பதே பழங்காலப் பெயரெச்ச எதிர்மறைவாய்பாடு. செய்யாத என்ற
வாய்பாடு பிற்காலத்தது. இக்காலத்தார் செய்யாத என்பதே இயற்கையான வாய்பாடு
எனவும் செய்யா என்பது- செய்யாத என்பது ஈறுகெட்டதனான் ஏற்பட்டது எனவும்
மயங்கிக் கூறும் நிலைஏற்பட்டுள்ளது.

உண்ணா என்பது- உண்ணும்- உண்ட- என்னும்இரண்டற்கும் மறை.
உண்ணாதஎன்பது உண்ட என்பதற்குமறை. உண்ணாது என்பது- உண்டு- உண்ணூ-
உண்ணா-உண்குபு- என்பனவற்றிற்கு மறை. இதனானே செய்பு என்பது
இறந்த காலம் உணர்த்துதல் பெற்றாம்.

இனிச் செய்தென என்பது வினைமுதலோடு வருவழி‘மழை பெய்யாது அறம்
பெறாதாயிற்று’ எனச் செய்து என்பதன் மறையே வருதலும் அது பிற வினையொடு
வருவழி‘மழை பெய்யாமல் மரம் குழையாதாயிற்று’ என இறந்தகாலம்உணர்த்தும்
செய்து என்னும் எச்சத்து