சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-33611

எதிர்மறையே தனக்கு மறையாய் வருதலும் கொள்க. இவ்விரண்டு எச்சத்திற்கும்
செய்யாமை என்பதூஉம் மறை.

இனி, உண்ணாமைக்கு என்பது உண்ணிய- உண்ணியர் உணற்கு-
என்பனவற்றிற்கும், உண்ண என எதிர்காலம் உணர்த்தும் செய என் எச்சத்திற்கும்
மறையாம்.

இனிச் செயின் என்பதற்கு ‘மழை பெய்யாவிடின் அறம் பெறாது, மழை
பெய்யாவிடின் மரம் குழையாது, எனப் பிற சொல்லான் மறை வரும்.

இது, உண்ணாதபின்- உண்ணாதமுன்- உண்ணாக்கால்- உண்ணாக்கடை-
உண்ணாவழி- உண்ணாவிடத்து- எனவும் வரும்.

இனி, கொள்ளாது ஒழிவான் என ஏனையவற்றிற்கும் வரும்.

இனி, கரிய சாத்தற்குச் செய்ய சாத்தன் எனவும், நல்ல சாத்தற்குப் பொல்லாத
சாத்தன் எனவும் வரும் பெயரெச்சக் குறிப்பு மறைவிகற்பமும் அறிக.

இனி, சோறு உண்டாயிருந்தது- சோறு ஆவதாயிருந்தது- என்பனவற்றிற்குச் சோறு
இன்றி- சோறு அன்றி-என வினையெச்சக்குறிப்பு மறை ஆதலும் கொள்க.

வேற்றுமை எதிர்மறுத்து வரும் எனவே, அவ்வேற்றுமை ஏற்றசொல்
முற்றுச்சொல்லேயாம் ஆதலின், வினை முற்றுச்சொற்கும் மறை வரும் என்பது கூறினார்
ஆயிற்று.

இனி செய்யும் என் முற்றிற்கும் உண்ணான் அவன்- உண்ணாதுஅது- என வரும்
மறை ஒன்றென முடித்தலால் கொள்க.’- என்பது நச்சினார்க்கினியர் உரை.
(தொல்.சொல்.238)