சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

612 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

இந்நூற்பாவில் வினையெச்சமும் பெயரெச்சமும்கூறப்பட்டிருப்பவும் வினைமுற்று
கூறப்படாமைக்கு உரியகாரணத்தைச் சேனாவரையர் தொல். சொல்.236இல்
குறிப்பிட்ட செய்திகளைக் குறிப்பிட்டே விளக்கியுள்ளார்இவ்வாசிரியர்.
வினைபெயரெச்சங்களும் விதிவினையாய்அமைந்த வாய்பாடுகளான் விளக்கப்பட்டன
படவே அவைமறைக் கண்ணும் வரும் என்பது கூறவேண்டுவது ஆயிற்று.ஆனால்
வினைமுற்றுக்கள் விதிவினை மறைவினை என்றஇரண்டற்கும் பொதுவாகிய ஈறுபற்றி
ஓதப்பட்டன. ஆன்ஈறுஉண்டான் என்ற விதிவினைக்கும் உண்ணான் என்ற
மறைவினைக்கும் பொது. பிறவும் அன்ன. ஆகவே,எதிர்மறுத்துரைத்தல் பெயரெச்ச
வினையெச்சங்களுக்கேகூறப்பட்டது என்பது.

“உண்ணாது வந்தான், உண்டு வாரான் என எச்சமும்
முடிக்கும் சொல்லும் எதிர் மறுத்தன.
 

  ‘மருங்கோடித் தீவினை செய்யான் எனின்’
 
குறள்.210
 
  ‘கற்றில கண்டு அன்னம்’
 
திருக்கோவை.97
 
என்னும் குறளினும் திருக்கோவையாரினும் பரிமேலழகரும்பேராசிரியரும் செய்தலோடும்
கற்றலோடும் முடியும் என்பர்.இதுவும் அது. பிரதியோகி நியோகியோடே ஒக்கும்
என்பதேகருத்தாயிற்று. இதனை ஆகாரியாரோபம் என்பாரும் உளர்.
 
  ‘அறவினை யாது எனின் கொல்லாமை’
 
குறள்.321
 
என்னும் குறளுள் பரிமேலழகர் விலக்கிய தொழிலும்செய்தலோடு ஒக்கும் ஆதலின்
கொல்லாமை அறவினைஆயிற்று என்பர்.
 
  ‘காலின் நீர் நீங்காமை உண்டிடுக
பள்ளியும் ஈரம் புலராமை ஏறற்க.’
 
ஆசார.19
என்பது எச்சமும் முடிக்கும் சொல்லும் எதிர் மறுத்தலின்அது சொல்லான் முடியாது
ஈரம் புலர்ந்தபின் ஏறுக எனப்