சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-33,34613

  பொருள்படுதலின், அஃது எதிர்மறை ஆகாது என்க. இதனை
அலங்கார நூலார் அபாவாபாவம் என்பர்.”

 


பிர.வி.வே.39

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘எதிர்மறுத்து மொழியினும் தத்தம் மரபின்
பொருள்நிலை திரியா வேற்றுமைச் சொல்லே.’
 
தொல்.சொல்.107
 
  ‘பெயரெஞ்சு கிளவியும் வினையெஞ்சு கிளவியும்
எதிர்மறுத்து மொழியினும் பொருள்நிலை திரியா.’
 
தொல்.சொல்.236
 
  ‘உருபும் வினையும் எதிர்மறுத்து உரைப்பினும்
திரியா தத்தம் ஈற்று உருபின் என்ப.’
 
நன்.354
 
  ‘வேற்றுமை .............ஏற்ற பொருள் மாறினும்
தான்நிற்றல்..........தேறவரும் மெய்ந்நூல் தெளிவு.’
 
நே.சொல்.21
 
  ‘சாற்றும் பெயர்வினை யெச்சங்கள்.........
எதிர்மறுத்துச் சொன்னாலும் ஏற்றபொருள் குன்றா.’
 
நே.சொல்.46
 
  ‘சிறக்கும் துணைவினை மறுக்கும்..........’
‘உருபு, எதிர்மறுத்து உரைப்பினும் பொருள்நிலைதிரியா.’
 
பி.வி.39
மு.வீ.பெ.85
 
  ‘பெயரும் வினையும் எதிர்மறுத்து உரைப்பினும்
பொருள்நிலை திரியாது எச்சக் கிளவி.’
 
மு.வீ.வி.37
 

வேற்றுமைக்கண்ணும் வினைச்சொற்கண்ணும்
வழுவமைதி
 

328 உருபுதொடர்ந்து அடுக்கிய வேற்றுமைக் கிளவி
பொருள்சொல் மருங்கின் ஒருசொலான் முடிதலும்
முற்றுஇயல் மொழியும் பெயர்எஞ்சு கிளவியும்
தத்தம் கிளவி அடுக்குந வரினும்