சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

614 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  பன்முறை யானும் வினைஎஞ்சு கிளவி
சொல்முறை முடியாது அடுக்குந வரினும்
முன்னது முடிய முடிதலும் மரபே.

 

இது வேற்றுமைக்கண்ணும் வினைச்சொற்கண்ணும் வழுஅமைதி பற்றி நிகழ்வதோர்
ஒழிபு கூறுகின்றது.

இ-ள்: பல உருபும் தம்முள் தொடர்ந்து அடுக்கி வந்தவேற்றுமைச்சொற்கள்
எல்லாம் முடிக்கும் சொல் ஒன்றனான்பொருள் செல்லும் இடத்து அவ்வொன்றனான்
முற்றுப்பெற்றுநடத்தலும், முற்று வினைச்சொல்லும் பெயரெச்சவினைச்சொல்லும் தத்தம்
சொற்கள் பல அடுக்கிவரினும்- ஒருவாய்பாட்டானும் மற்றப் பல வாய்பாட்டானும்
வினையெச்சவினைச்சொற்கள் அவ்வச்சொற்கள் முறையான் முடியாதுஅடுக்கிவரினும்-
முன்நின்ற சொல் முடிய ஏனையவும்பொருள் முடிந்தன ஆகலும் இலக்கணமாம்
என்றவாறு.

ஈண்டு ‘வேற்றுமைக்கிளவி’ என்றது வேற்றுமைஉருபை இறுதியாக உடைய
சொல்லை. ‘பொருள்செல்மருங்கின்’ என்பதனையும் ‘சொல்முறை முடியாது’
என்பதனையும் ஏனையவற்றோடு உய்த்து உரைக்க.

வரலாறு:

  ‘என்னொடும் நின்னொடும் சூழாது’
 
அகம்.128
எனவும்
 
  ‘அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்’
குறள்.543
எனவும்
 
வேற்றுமைக்கிளவியும்,

உண்டான் தின்றான் ஓடினான் பாடினான் சாத்தன் எனவும்,

நல்லறிவு உடையன் செவ்வியன் சான்றோன் மகன் எனவுற்,