சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-34615

தத்தம் கிளவியால் தெரிநிலை முற்றும் குறிப்பு முற்றும்,
                    ‘நெல்லரியும் இருந்தொழுவர்’ என்னும் புறத்தொகைப்பாட்டினுள் (24)
 

‘தெண்கடல்திரை மிசைப்பாயுந்து................
                    தண்குரவைச் சீர்தூங்குந்து.............
                    எல்வளை மகளிர் தலைக்கை தரூஉந்து
    ...................மிழலை’

எனச் செய்யும் என்னும் பெயரெச்சமும்,

உண்டு தின்று ஓடிப்பாடி வந்தான் எனவும்
                    உண்டு பருகூத் தின்னுபு வந்தான் எனவும்

ஒரு வாய்பாட்டானும் பலவாய்பாட்டானும் வினையெச்சமும்சொல்முறை முடியாது
அடுக்கிவந்து பொருள்செல் மருங்கின்ஒரு சொல்லால் முடிந்தவாறு காண்க.

இவற்றுள் செய்யும் என்னும் பெயரெச்சம் அடுக்கிவிழலை’ என்னும் ஒருபெயர்
கொண்டு முடிந்துழித்

 
‘தாங்கா வினையுள் நல்லூர் கெழீஇய’
 

புறம்.24
என்னும் பெயரெச்சம் இடைநிலையாய் வந்தது.

சாத்தன் தாயைக்காதலன்- நாய்தேவன் ஆயிற்று-என்புழித் தாயை- தேவன்-
என்பன காதலன்- ஆயிற்று-என்னும் பயனிலைக்கு அடையாய் நின்றாற்போல,
கோட்டைநுனிக்கண் குறைத்தான்- தினையிற் கிளியைக்கடியும்-என்புழி நுனிக்கண்-
கிளியை- என்பன குறைத்தான்-கடியும்- என்னும் முடிக்கும் சொல்லிற்கு அடையாய்
நின்றனஆகலான் அவை அடுக்கு அன்மையின் அவை உதாரணம்ஆகாமை உணர்க.
யானையது கோட்டை நுனிக்கண்பொருட்கு வாளால் குறைத்தான் என்பதும் அது. இனி,