சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

616 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘கட்கினியான் காதலன் காதல் வகைபுனைவாள்
உட்குடையாள் ஊர்நாண் இயல்பினாள்- உட்கி
இடனறிந்து ஊடி இனிதின் உணரும்
மடமொழி மாதராள் பெண்’
 
நாலடி.384
 
எனவும்,
 
  காலார் கழலார் கடுஞ்சிலையார் கைக்கொண்ட
வேலார் வெருவந்த தோற்றத்தார்- காலன்
கிளர்ந்தாலும் போல்வார் கிணைப்பூசல் கேட்டே
உளர்ந்தார் நிரைப்பெயர்வும் உண்டு,
 
பு.வெ.மா.கர.2
 
எனவும் வருவனவற்றை ஓர் உருபு அடுக்கித் தமக்கு ஏற்றஒருபெயரும் வினையும்
இறுதிவர முடிந்தன என்பாரும்உளர் அவை முறையே முற்றெச்சங்கள் அடுக்கி
‘உணரும்மடமொழி மாதராள்’ எனவும், ‘உளர்ந்தார்’ எனவும் வரும்பயனிலைகட்கு
அடையாய் நிற்றலான் அன்னவும் இன்னஎன மறுக்க.

குழையைச் சாத்தனது கள்ளரின் என்கண் எனஇவ்வாறு தொடராது
வருவனவற்றை நிக்குவதற்கு ‘உருபுதொடர்ந்து அடுக்கிய’ என்றும்,

நீ தந்த சோற்றையும் கூறையையும் உண்டு உடுத்துஇருந்தேம் எனவும் உண்டு
தின்று மழைபெய்யக் குளம்நிரம்பும் எனவும் வரும் இன்னோரன்னுழி முடிக்கும்சொல்
ஒன்றனான் முடியாமையினான் அவற்றை நீக்குதற்குப்பொருள் செல்மருங்கு’ என்றும்
கூறினார்.

சொல்தொறும் இயையாது முடிக்குஞ்சொல் ஒன்றனான்முடிதல் வழுஆயினும்,
பொருள் செல் மருங்கின் அமையும்என்றலின் வழு அமைத்தவாறு ஆயிற்று. 34
 

விளக்கம்
 

வேற்றுமை உருபு ஏற்ற சொற்களும் வினைச்சொற்களும்தனித்தனி முடிக்குஞ்
சொற்களைக் கொண்டு முடிதலேமுறை.