உண்டு பரூகூத்தின்னுபு வந்தான் எனச் செய்து செய்யூ செய்பு என்ற வாய்பாட்டு வினையெச்சங்கள் அடுக்கி ‘வந்தான்’ என்ற வினைகொண்டு முடிந்தன. இடைநிலை என்பது இடைப்பிறவரலாம். ‘நாய் தேவன் ஆயிற்று’ என்பது சிந்தாமணிச்செய்தி. சாத்தன் தாயைக் காதலன் என்ற தொடரில் சாத்தன் எழுவாய்; காதலன் முடிக்குஞ் சொல்லாம் குறிப்புவினை முற்று; தாயை என்பது அம்முற்றிற்கு அடை. நாய் தேவன் ஆயிற்று என்ற தொடரில் நாய் எழுவாய்; ஆயிற்று என்பது அதன் பயனிலையாம் ஆக்கவினைச்சொல்; தேவன் என்பது ஆயிற்று என்பதன் அடை. இவ்வாறே நுனிக்கண் குறைத்தான். கிளியைக் கடியும் என்பன அடையடுத்த பயனிலை யாயினமை சேனாவரையரானும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. (தொல்.சொல்.102) நச்சினார்க்கினியருக்கு இஃது உடன்பாடன்று. (தொல்.சொல்.நச்.103). உண்டு தின்று ஓடிப்பாடி வந்தான் என்புழி, ஒன்றனை ஒன்று கொண்டு முடியாது அடுக்கிய வினையெச்சங்கள் ‘வந்தான்’ என்ற வினைகொண்டு முடிவதுபோலவும், என்னொடும்.......சூழாது என்ற தொடரில் என்னொடும் நின்னொடும் என்பன தொடர்ந்து ‘சூழாது’ என்பதனைக் கொண்டு முடிவது போலவும், யானையது கோட்டை நுனிக்கண் பொருட்கு வாளால் குறைத்தான் என்ற தொடரில் யானையது என்பது கோட்டை என்பதனையும் கோட்டை என்பது நுனிக்கண் என்பதனையும் கொண்டு முடிதலின், குறைத்தான் என்பதற்குப் பொருட்குவாளால்- இரண்டும் அடையாய் நின்றன. இவை அடுக்கும் எனப்படா. உருபு அடுக்குதல் பல சொற்கள் ஒரே உருபின் ஏற்றவழியே என்று அறிக. இது மயிலைநாதர் கருத்தை மறுத்ததாம். (நன். 354 மயிலை) |