சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-34619

‘கட்குஇனியாள்’ என்ற பாடலில் ‘இனியாளாய், புனைவாளாய், உடையாளாய்,
இயல்பினாளாய் உட்கி ஊடி உணரும் மாதராள்’ என முற்றெச்சங்கள்
வினையெச்சத்தோடு அடுக்கி உணரும் என்ற பெயரெச்சம் கொண்டன.

‘காலார்கழலார்’ என்றபாடலில் கழலாராய், வேலாத்தாய், தோற்றத்தாராய்,
உணர்ந்தார் என முற்றெச்சங்கள் அடுக்கி வினைமுற்றினைக்கொண்டு முடிந்தன. இவை
ஓர் உருபு அடுக்கிப் பெயர் வினை கொண்டு முடிந்தன என்பர் மயிலைநாதர்.
(நன்.354. மயிலை)

குழையைச் சாத்தனது கள்ளரின் என்கண் என்பன பொருள் தொடர்பின்றி
இணைக்கப்பட்ட தனிச்சொற்கள்.

சோற்றைஉண்டு கூறையை உடுத்து எனவும், மழை பெய்யவே குளம் நிரம்பும்
எனவும் வெவ்வேறு வினைகொண்டு முடிந்தமை காண்க. உண்டு தின்று என்பனவற்றிற்கு
முடிக்குஞ்சொல் இன்று.

யானையது.......குறைத்தான்- என்ற தொடரை உருபு விரவிப் பல அடுக்கி ஒருவனை
கொண்டதற்கு எடுத்துக்காட்டாக நன்னூல் உரைகள் கூறும்.

பெயரெச்சம் விதியாய் அடுக்குதலேயன்றி மறையாகவும் அடுக்கும் எனக்கூறி,
 

  ‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்’
குறள்-448
  ‘புரைதீரா மன்னா இளமை,
’மூவா முதலா உலகம்’
சீவக-1
என்பனவும் எடுத்துக்காட்டுவர் பிரயோகவிவேக நூலார்.39 உரை.

பெயர் முற்று எச்சங்கள் ஒன்று பல அடுக்கல்,வேறு அடுக்கல், விதியாய்
அடுக்கல், மறையாய் அடுக்கல்விதி முறை கூடிவிரவி அடுக்கல் முதலாகப் பலவகைப்
படுதலைக் குறிப்பிட்டு,