| ‘அரியானை அந்தணர்தம் சிந்தையானை’ | திருமுறை-1 |
| ‘கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று’ | குறள்.1101 |
இவை ஒன்று பல அடுக்கல்; வாளான் மருவாரை வழிக்கண் வெட்டினான். இது வேறு பல அடுக்கல்; |
| ‘புரைதீரா மன்னா இளமை’- ‘ஏவவும் செய்கலான் தான் தேறான்’ | குறள்.848 |
| ‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்’ | குறள்.448 |
இவை மறையாய் அடுக்கல்; சாத்தனைக் கண்டு கொற்றனைக் காணாது வந்தான், சோறு உண்டு கை கழுவாது வந்தான். - இவை விரவி அடுக்கல்- முதலிய எடுத்துக் காட்டுக்களும் இலக்கணக்கொத்துநூலார் தந்துள்ளார்.(120) |
ஒத்த நூற்பாக்கள்
|
| ‘ஏனைத்துமுற்று அடுக்கினும் அனைத்துமொருபேர்மேல் நினைத்துக்கொள நிகழும் நிகழ்த்திய முற்றே ‘வினையெஞ்சு கிளவியும் பெயரெஞ்சு கிளவியும் பலபல அடுக்கினும் முற்றுமொழிப் படிய.’ அகத்தியம்.
‘உருபுதொடர்ந்து அடுக்கிய வேற்றுமைக் கிளவி ஒருசொல் நடைய பொருள்செல் மருங்கே.’ | தொல்.சொல். 102 |
| ‘அவைதாம் தத்தம் கிளவி அடுக்குந வரினும் எத்திறத் தானும் பெயர்முடி பினவே.’ | 429 |
| ‘பன்முறை யானும் வினையெஞ்சு கிளவி சொல்முறை முடியாது அடுக்குந வரினும் முன்னது முடிய முடியுமன் பொருளே.’ | 233 |