இது முடிவனவற்றை முடிப்பன முடிப்புழி வழுவமைதிநிகழ்வதோர் ஒழிபு கூறுகின்றது; என்னை? ஒட்டி நிற்றற்குஉரிய அவ்விரண்டற்கும் இடையே பிறசொல் வருதல் வழுஆயினும் முடிக்கும் சொல்லொடு இயைபு உடையன வரின்அமையும் என்றலின். இ-ள்: உருபு ஏற்ற சொற்களும் முற்றுவினைச்சொற்களும் பெயரெச்ச வினைஎச்சச் சொற்களும் தாம்தாம் கொண்டு முடியும் பெயர்ச் சொற்கும் வினைச்சொற்கும் இடையே பிற சொற்கள் வருதலும் பொருந்தும், பொருந்துவனவரின் என்றவாறு. எ-டு: சாத்தன் உண்டு வந்தான் அறத்தை அரசன் விரும்பினான் |