வேற்றுமை உருபு ஏற்ற சொற்களுக்கும் அவைகொண்டுமுடியும் சொற்களுக்கும் இடையே இடைப்பிறவரல்வருதற்கும்,முற்றிற்கும் அவை கொண்டு முடியும் பெயர்க்கும் இடையேஇடைப்பிறவரல் வருதற்கும் காட்டப்பட்டஎடுத்துக்காட்டுக்கள் நன்னூல் 355ஆம் நூற்பாவுரையுள்மயிலைநாதர் காட்டியனவே. ஏனைய சேனாவரையர் நச்சினார்க்கினியர் உரைத்தன. வாளான் மருவாரை மாய வெட்டினான் என்றதொடரில் வருவாரை மாய என் இரு சொற்கள்இவ்வாசிரியருக்கு இடைப்பிறவரல். இவர் வெவ்வேறுஉருபுகள் தொடர்ந்து அடுக்கி வருதலை வேண்டார்.வெவ்வேறு உருபுகளும் விரவி அடுக்கி வருதலும் உண்டுஎன்ற கருத்துக் கொண்ட நன்னூல் விருத்தியுரையாசிரியருக்கு ‘வாளான் மருவாரை மாய வெட்டினான்’என்ற தொடரில் மாய என்பது ஒன்றுமே இடைப்பிறவரல். கவளங் கொள்ளாக் களித்த யானை என்ற தொடர்அதிங்கத்தின் கவளங் கொண்டு களித்த யானை என்றுபொருள்படும். கவளம் கொள்ளாத மதக்களிப்புடைய யானைஎன்று ‘கொள்ளா’ என்பதனைப் பெயரெச்சமாகக் கொள்ளின்களித்த என்ற சொற்பொருள் சிறவாது. சிந்தாமணியைநோக்கிக் ‘கவளங் கொள்ளாச் சிறவாது. சுளித்த யானை’என்று இத்தொடர் அமைந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.‘அரும்பெறல் குரிசிற்கு. அஞ்ஞான்று ஓடிய நாகம்நாணி..........நெய்ம்மிதி கவளங் கொள்ளாது சுளிவொடு நின்றதன்றே’ சீவக.1076 என்ற பாடல் நோக்குக. சில இடைப்பிறவரல்- பொருத்தமில் புணர்ச்சி எனப்புகன்றனரே’ (இ. கொ.108) என்ற நூற்பா உரையுள் இலக்கணக்
|