சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

626 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  வழுதி வந்தான்- மால் கரியன் - எனவும்,
வந்தான் உண்டு,
‘பன்னெடுங் காலமும் வாழியர்
பொன்னொடும் தேரொடும் தானையின் பொலிந்தே!
‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்’
 



(குறள்.666)
எனவும் முறையே இறுதிக்கண்ணும் முதற்கண்ணும் வந்தன.

சாத்தனது ஆடை- குன்றத்துக்கண் கூகை- உண்ட சாத்தன்- என இறுதிக்கண்
நின்றவழி அவற்றை முடித்து நின்றாற் போல, ஆடை சாத்தனது- கூகை குன்றத்துக்கண்
சாத்தன் உண்ட- என முதற்கண் நின்றவழி அவற்றை முடித்து நில்லாமையின்
இன்னோரன்ன முதற்கண் நிற்றற்கு ஏலாமையின் ‘வருவன வருதலும் முறையே’ என்றார்.
 

ஆறன் உருபு ஏற்ற பெயர் சாத்தனது ஆடை என முடிக்குஞ் சொல் பின்
வந்துழிப் பெயராயும், ஆடை சாத்தனது என முடிக்கும் சொல் முன் வந்துழி
வினைக்குறிப்பாயும் நிற்றல் உடைமையும் உணர்க. 36
 

விளக்கம்
 

  எச்சப் பெயர் வினை ஈற்றில் வருதல் வழாநிலை;
எச்சப் பெயர் வினை முதற்கண் வருதல் வழுவமைதி.
 

 

எடுத்துக்காட்டுக்களுள் சாத்தன் வந்தான் என்பது ஈறாக உள்ள தொடர்களில்
உருபு ஏற்ற சொற்களும் வினைமுற்றும் பெயரெச்சமும் வினையெச்சமும் கொண்டு
முடியும் சொற்கள் இறுதிக்கண் வருதலின் இவை வழாநிலைக்கு எடுத்துக்காட்டுக்களாம்.
வந்தான் சாத்ததன் என்பது முதல் ‘எய்துப.....பெறின்’ என்பதுகாறும் உள்ள தொடர்கள்
வழுவமைதியாம்.

முடிக்குஞ்சொல் முதற்கண் வருங்கால், ஆறாம்வேற்றுமை உருபு ஏற்ற சொற்குரிய
முடிக்குஞ் சொல்லும், ஏழாம்