தொல்காப்பியனார் வினைமுற்று- பெயரெச்சம்- வினையெச்சம்- என்பன முடிக்குஞ் சொல்லொடு புணரும் நிலைக்கண், முடிக்குஞ் சொல் முதற்கண் வருதல் பற்றி யாதும் கூறவில்லை. பின்னுள்ளோர் கூற்றைத் தழுவி இவ்வாசிரியர் அவற்றையும் கொண்டார் என்க. |
ஒத்த நூற்பாக்கள் |
| ‘இறுதியும் இடையும் எல்லா உருபும் நெறிபடு பொருள்வயின் நிலவுதல் வரையார்.’ | தொல்.சொல்.103 |
| ‘எச்சப் பெயர்வினை எய்தும் ஈற்றினும்.’ ‘வேற்றுமை ஈற்றினும் நிற்பினும் வரையார்.’ | நன்.357 மு.வீ.பெ.82 |
(ஆடைசாத்தனது, கூகை குன்றத்துக்கண் என முடிக்குஞ் சொல் இறுதி வரினும் முத்துவீரியமுடையாருக்கு வழா நிலையேயாம்.) |
உருபின் கண்ணதொரு வழுவமைதி |
331 | ஐயும் கண்ணும் அல்லாப் பொருள்வயின் மெய்உருபு தொகாஅ இறுதி யான, | |
இஃது உருபின் கண்ணது ஆகிய வழுவமைதி பற்றி நிகழ்வதோர் ஒழிபு கூறுகின்றது; என்னை? தாம் நின்று தம் பொருள் உணர்த்தற்பாலன தொக்கு நிற்றல் இலக்கணம் அன்மையின் வழுவாயினும், தம்பொருள் உணர்த்தும் ஆற்றல் உடையன அமைவுடைய என்றலின். இ-ள்: ஐகாரவேற்றுமைப் பொருளும் கண்ணென் வேற்றுமைப் பொருளும் அல்லாத பிற பொருள்மேல் நின்ற உருபு தொடர்மொழி இறுதிக்கண் தொக்கு நில்லா என்றவாறு. |