இது பால் வகையான் உளது ஆகிய வழுவமைதி பற்றி நிகழ்வதோர் ஒழிபு கூறுகின்றது. இ-ள்: ஒருபாற்கு உரிய சொல்மேல் வைத்துக் கூறிய சொல் ஒழிந்த பாற்கண்ணும் வருதல் நெறி என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. வரலாறு: நஞ்சு உண்டான் சாம் என்பது ஒருபாற்கு உரிய சொல் ஆயினும், நஞ்சு உண்டாள் சாம்- நஞ்சு உண்டார் சாவர்- நஞ்சுஉண்டது சாம்- நஞ்சு உண்டனசாம்- என ஏனைப்பால் கண்ணும் உரித்தாய் வந்தவாறு காண்க. பார்ப்பான் கள் உண்ணான் என்றவழிக் கள் உண்ணாமை சாதி பற்றிச் செல்வது ஒன்று ஆகலின் பார்ப்பனிக்கும் பார்ப்பார்க்கும் அல்லது பிற சாதியார்க்கும் அஃறிணைக்கும் |