சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-38631

செல்லாமையான் இன்னோரன்ன ஐம்பாற்கண்ணும் செல்லாது சிலபால்மேல் சேறலும்,
இவ்வாற்றான் அன்றிப் பிறவாற்றான் வருவன பிறவும் உரையில் கொள்க.

‘ஒருபாற்கிளவி ஏனைப்பாற்கண்ணும் வருதல் வழு ஆயினும் நஞ்சுண்டல்
சாதற்குக்காரணம் என்பான் ஒரு பால்மேல் வைத்து ‘நஞ்சு உண்டான் சாம்’ என்றும்,
கள் உண்ணாமை சாதி பற்றி வரையப்படுவது ஒன்று என்பான் பார்ப்பான் கள்
உண்ணான்’ என்றும் கூறியது அல்லது, ஆண்டுத் தோன்றும் ஆண்மையும் ஒருமையும்
சாதற்கும் உண்ணாமைக்கும் காரணம் என்னும் கருத்தினன் அல்லன. அதனால்,
சொல்லுவான் கருத்தொடு கூடிய பொருள் ஆற்றலால் சாதலும் கள்உண்ணாமையும்
ஏனைப்பாற்கும் ஒத்தலின் வழுவமைதி ஆயின. பொருள் ஆற்றலால்
ஏனைப்பாற்கண்ணும் சேறலின் இவ்விலக்கணம் பொருளினுள் கூறற்பாற்றே ஆயினும்,
சொல்லொடு பொருட்கு ஒற்றுமை உடைமையான் ஈண்டுக் கூறினார் எனக் கொள்க.
 

விளக்கம்
 

ஒருபாற் சொல்லிற்குக் கூறிய செய்தி சொல்லாற்றலால் அப்பால் ஒன்றனையே
உணர்த்தாது, பொருள் ஆற்றலின் ஏனைப் பால்கள்மேலும் சேர்தலின்
வழுவமைதியாகுமாறு,

நஞ்சுண்டான்சாம் என்ற தொடரில் சொல்லாற்றலால் பெறப்படுவது படர்க்கை
ஆண்மகன் இறப்பான் என்பது; பொருளாற்றலால் பெறப்படுவது ஆகியசாதற்கு நஞ்சு
காரணம் என்பது ஒரு பால்மேல் வைத்துக்கூறப்படினும் ஏனைப்பாற்கும் செல்லும்
என்பது.

இச் செய்திகள் இந்நூற்பாவாலேயே கொள்ளப்படல் வேண்டும் என்று கூறிச்
சேனாவரையர் தொல்.சொல்.161