சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

632 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

ஆம் நூற்பாவாகிய ‘இருதிணைப்பிரிந்த’ என்பதன் கண் உரையாசிரியரை மறுத்துச்
சொற்றன யாவும் இவ்வாசிரியரால் இந் நூற்பாவிளக்கமாகக் கூறப்பட்டுள்ளன.

இந் நூற்பாச்செய்தியினை உரையாசிரியரும் நச்சினார்க்கினியரும்
‘இருதிணைப்பிரிந்த’ (தொல்.சொல்.163.நச்) என்ற நூற்பாக் கருத்தாகவே கொள்வர்.
‘ஒருபாற்கிளவி’ (தொல்.பொருள்.222) என்ற நூற்பா,

‘ஒத்த கிழவனும் கிழத்தியும்’ (தொல்.பொருள்.93) என்ற களவியல் நூற்பாவில்
பன்மை கூறா வழுவை அமைத்தற்கு எழுந்தது என்று நச்சினார்க்கினியர் உரைப்பர்.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  முழுதும் தொல்.பொருள்.225
  ‘ஒருமொழி ஒழிதன் இனங்கொளற்கு உரித்தே.’ நன். 368


பொதுப்பெயர் வினைகள் பொதுமை நீங்குமாறு
 

333 பொதுப்பெயர் வினைகளின் பொதுமை நீக்கும்
மேல்வரும் சிறப்புப் பெயர்வினை குறிப்பே.

 

இது பொதுவாகிய பெயர் வினைகளைப் பற்றி நிகழ்வதோர் ஒழிபு கூறுகின்றது.

இ-ள்: திணைபால் இடங்களுக்குப் பொதுவாய் நின்ற பெயர்வினைகளுடைய
பொதுமையை நீக்கி ஒன்றற்கு உரியவாக்கும், தத்தம் மரபினான் அவற்றின் மேல் வரும்
படர்க்கைப் பெயரும் படர்க்கை முற்றுவினையும் சொல்லொடு கூடிய குறிப்பும்
என்றவாறு.

எ-டு: சாத்தன் ஒருவன் சாத்தன் ஒன்று எனவும், சாத்தன் வந்தான் வந்தது
எனவும் பொதுப்பெயரின் பொது