மையைத் தத்தம் மரபினான் மேல் வரும் சிறப்புப் பெயர் வினைகள் நீக்கியவாறு காண்க. முடவன்- முடக்கொற்றன்- தந்தை- முதலிய பிறவும் அன்ன. ஆஒன்று, ஆபல- ஆவந்தது, ஆவந்தன- எனவும் பால்பகா அஃறிணைப்பெயரின் பொதுமையைத் தத்தம் மரபின் மேல் வரும் சிறப்புப் பெயர் வினைகள் நீக்கியவாறு காண்க. வாழ்க மன்னவன்- வேறு அவன்- உண்டுசாதல்- இல்லை அவன்- காணும் அவன்- உண்டசாத்தன்- உண்டுவந்தான்- அப்பொது வினைகளின் பொதுமையைத் தத்தம் மரபினான் மேல்வரும் சிறப்புப் பெயர் வினைகள் நீக்கியவாறு காண்க. பிறவும் அன்ன. யான் வருதலான் ஆசாரம் பெற்றாய்- யான் பற்றலான் உடம்பு நுணுகிற்று- எனவும், நீவருதலான் ஆசாரம் பெற்றேன்- நீவருதலான் முல்லை அரும்பின- எனவும் சொல்லொடு கூடிய குறிப்பு, பொதுமை நீக்கியவாறு காண்க. ஒரு சாத்தன் ஒருவனானும் ஒருத்தியானும் பலரானும் ஒன்றானும் பலவானும் தன்னுழைச் சென்றவழி, நீ வந்தாய்- நீயிர் வந்தீர்- என்னும் அன்றே? ஆண்டு அது கேட்டான் இவன் இன்னபால் கருதிக் கூறினான் என்று உணர்தலும், |