வாழ்க முதலிய வியங்கோள் வினைகளும், வேறு இல்லை உண்டு என்ற குறிப்பு வினைமுற்றுக்களும், பெயரெச்சவினையெச்சங்களும் இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் பொதுவான வினைகளாம். அவை, |
| வாழ்க மன்னவன்- வியங்கோள்- ஆண்பால். வேறு அவன்- வேறு- ஆண்பால் உண்டு சாதல்- உண்டு- ஒன்றன்பால் இல்லை அவன்- இல்லை- ஆண்பால் காணும் அவன்- பெயரெச்சம்- ஆண்பால் உண்ட சாத்தன்- பெயரெச்சம்- ஆண்பால் உண்டு வந்தான்- வினையெச்சம்- ஆண்பால் | |
எனச் சிறப்பான முடிக்குஞ் சொற்களான் பொதுமை நீங்கிச் சிறப்பு வகையில் திணைபால்கட்கு உரிமை பெற்றவாறு. |
| யான் என்பது இருதிணைப் பொதுப்பெயர். | |
யான....பெற்றாய்’ என்புழி, யான் உயர்திணை ஆண்பால்; யான் பற்றலான் உடம்பு நுணுகிற்று’ என்புழி, யான் என்பது வாடைக்காற்றாகிய அஃறிணை ஒன்றன்பால்; ‘நீ வருதலான் ஆசாரம் பெற்றேன்’ என்புழி நீ- உயர்திணை ஆண்பால்; ‘நீ வருதலான் முல்லை அரும்பின’ என்புழி நீ- கார் காலத்தைக் குறித்தலின் ஒன்றன்பால். |
இவை குறிப்பான் உணர்த்தின. நீ வந்தாய், நீயிர் வந்தீர் என்பன சொல்லுவான் குறிப்பினாலேயே திணை உணர்த்தும். |
| ‘ஒருவர் ஒருவரைச் சார்ந்துஒழுக லாற்றின்’ | நாலடி.309 |
என்புழி, ஒருவர் என்ற ஆண்மை பெண்மைப் பொதுச்சொல் ஆண்பாலைக் குறிப்பான் உணர்த்திற்று. இதனைச் சேனாவரையர் நச்சினார்க்கினியர் முதலாயினாரும் குறிப்பிட்டனர். |