வேற்றுமை உருபும் உவம உருபும் உம்மையும் தம்மிடையே சாத்தன்கை பவளவாய் இராப்பகல் என்பன போலத் தொக்கு இரண்டும் பலவும் ஆகிய சொற்கள் ஒட்டி ஒருசொல் நீர்மையவாய் வருவனவும் வேழக்கரும்பு என்றாற்போலத் தம்மிடையே எதுவும் தொகாது. ஒட்டி ஒருசொல் நீர்மையவாய் வருவனவும் என இருவகைப்படும் தொகைச் சொற்களுக்கு இலக்கணம். ஒட்டி ஒருசொல் நீர்மையவாய் இருந்து, பெயர் போலவும் வினை போலவும் முடிக்குஞ் சொல்லொடு தொடர்தலே தொகை இலக்கணம் என்று இவ்வாசிரியர் சேனாவரையர் கருத்தை நன்கு உட்கொண்டு நூற்பா பாத்து விளக்கமும் தந்துள்ளார். ‘காத்தியாயனார் சமாசனில் விபத்தி இல்லை என்று சித்தாந்தம் பண்ணினார். அவரைப் பின்பற்றினார் சேனாவரையர்’- என்பது பிரயோக விவேகம் 20ஆம் நூற்பா உரை. பரஸ்பரா பேக்ஷாணாம் பூர்வோத்ர பதாநாம் சுபந்தானாம் கதம்சித் ஏகபத்யம் சமாச: சாகடாயன வியாக்கியானம். “தனிநிலைச் சொற்கள் வேற்றுமையாக அல்வழியாக அவ்வப்பொருள் மேல் பிளவுபட்டிசையாது தம்முள் கூடுவது தொகைநிலை எனவே, வேற்றுமை உருபு முதலிய சொற்கள் கெட்டுத் தனிநிலைச் சொற்கள் தம்முள் கூடுவது தொகை அன்றோ எனின், நன்று சொன்னாய்! |