மயங்கியலினும், மெய்யீற்று வேற்றுமை உருபும் உவம உருபும் உம்மையும் மெய்ம்மயங்கியலினும், நிலைமொழி ஈறாக வைத்துக் கெடுத்துப் பின் வருமொழியொடு புணர்த்தாமையின் அவ்வாறு உரைத்தல் மலையிடறு என்க.வடநூலாரும் அச்சுச் சந்தியினும் அல்லுச்சந்தியினும் அவ்வாறு உருபுகளையும் உம்மையையும் உவமையையும் வைத்துப் புணர்த்தார். இஃதன்றியும், தவளைவாய்- குவளைமலர்- அம்பிகாபதி- என்பனவற்றை ஆறாம்வேற்றுமை நிலைமொழி ஈறாக நின்று கெட்ட சந்தி என்றால் இயல்பு சந்தி ஆகாமையானும், |