சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

642 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

பெயரொடு பெயர்தொக்க தொகை வேற்றுமை அல்வழி என்ற இருவகைப்
புணர்ச்சிக்கண்ணும் வரும். பெயரொடு வினைதொக்க தொகை அவ்வழிக் கண்ணேயே
நிகழும். வினையொடு பெயர் தொக்குவரினும் பிளவுபட்டிசைத்தலான் தொகை ஆகாமை
முன்னர் விளக்கப்பட்டது.
 

  ‘எல்லாத்தொகையும் ஒருசொல் நடைய’

 

தொல்.சொல்.420
என்ற முறையால் பல பெயர்தொக்க தொகையும் ஒரு சொல் நீர்மையவாய் உருபு ஏற்றும்,
பயனிலை கொண்டும், தாமே பயனிலையாயும் அமையுமாறு காண்க.

ஒருசொல் நடையவாகும் தொடர்மொழிக்குக் காட்டிய எடுத்துக்காட்டுக்களும்
சேனாவரையரைப் பின்பற்றியே பெரிதும் உரைக்கப்பட்டுள்ளன.

வேற்றுமை உருபு முதலாயின தொகுதலின் தொகை ஆயின என்பார்
உரையாசிரியர், நச்சினார்க்கினியர் நன்னூலார் முதலாயினார். ஒட்டி ஒருசொல்,
நீர்மைப்படுதலின் தொகை ஆயின என்பார் சேனாவரையர், தெய்வச்சிலையார்
முதலாயினார்.

வேழக்கரும்பு முதலியவற்றில் எதுவும் தொகவில்லை; ஆனால் அவற்றின்கண்
உள்ள இரண்டு சொற்களும் ஒரு சொல் நீர்மைப் படுதலான் தொகை ஆயின. கடந்தான்
நிலம் என்புழி உருபு தொக்கு நிற்கின்றது; ஆயின் அது விட்டிசைத்தலான் தொகை
ஆகாது. ஆகவே, உருபு தொகுதல் பற்றித் தொகை என்ற பெயரிடுதல் நிரம்பாத
இலக்கணத்தது ஆகும் ஆதலின் ஒட்டி ஒருசொல் நீர்மைப்படுதலே தொகையாம்
என்பது. இவ்வாசிரியர் பெரும்பாலும் சேனாவரையர் வரைந்தனவே
ஏற்றுக்கொண்டுள்ளார்.

இக் கருத்துக்களைத் தொகுத்து இலக்கணக்கொத்து நூலார்