இது மேல் இருவகைப்படும் எனப்பட்ட தொகைநிலைத் தொடர்மொழிக்குப் பெயரும் முறையும் தொகையும் கூறுகின்றது. இ-ள்: வேற்றுமை உருபுகள் தொக அவற்றின் பொருள் தொக்க தொகையும், வினை பிறிது ஒரு சொல்லொடு தொக்க தொகையும், பண்பு பிறிது ஒரு சொல்லொடு தொக்க தொகையும், உம் என்னும் இடைச்சொல் |