சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-41645

லாக அதன் பொருள் தொக்க தொகையும் அன்மொழிப் பொருள் தொக்க தொகையும்
என மேற்கூறிய தொகைநிலைத் தொடர்மொழி ஆறாம் என்றவாறு.

ஈண்டு வினை என்றது வினைச்சொற்கும் வினைப்பெயர்க்கும் முதல்நிலையாய்
உண்- தின்- செல்- கொல்- என வினை மாத்திரம் உணர்த்தி நிற்பனவற்றை எனவும்,
பண்பு என்றது கரியன் செய்யன் கருமை செம்மை முதலியவற்றிற்கு எல்லாம்
முதல்நிலையாய்க் கரு-செய்- எனப் பண்பு மாத்திரம் உணர்த்தி நிற்பனவற்றை எனவும்
கொள்க. அன்மொழி ஆவது தொக்கசொல் அல்லாத மொழி என்பதாம். 41
 

விளக்கம்
 

இருவகை- உருபு முதலியன தொக்கு ஒருசொல் நீர்மைப்பட்டன என்பன. உருபு
முதலியன தொக்கவழியும் பொருளைத் திரிபின்றி உணர்த்தும் ஆற்றலுடையனவே
தொகையாய் வரும் என்பதாம்.
 

ஒத்த நூற்பாக்கள்
 

 

‘வேற்றுமைத் தொகையே உவமத் தொகையே
வினையின் தொகையே பண்பின் தொகையே
உம்மைத் தொகையே அன்மொழித் தொகை என்று
அவ்வாறு என்ப தொகைமொழி நிலையே.’

‘தற்புரு டன்பல நெல்கரும தாரயன் தாங்கியசீர்
நல்துவி குத்தொகை நாவார் துவந்துவன் நல்ல தெய்வச்
சொற்பயன் மாந்தர்கள் அவ்விய பாவம்இது என்றுதொன்மை
கற்பக மாப்பகர்ந் தார்தொகை ஆறும் கனங்குழையே.’
‘வேற்றுமை உம்மை வினைபண்பு உவமையொடு அன்மொழிஎன்று
ஆற்றுந் தொகைசெந் தமிணர்கள் ஆறுஎன்பர்’




தொல்.சொல்.412




வீ.சோ.45

வீ.சோ.50