| ‘வேற்றுமை உம்மை வினைபண்பு உவமையும் தோற்றிய அன்மொழியும் தொக்க....’
‘வேற்றுமை வினைபண்பு உவமை உம்மை அன்மொழி எனஅத் தொகைஆறு ஆகும்.’
‘தற்புரு டன்துவி குப்பல நெல்கர்ம தாரயனோடு உற்பல வாள்நெடுங் கண்பசுந் தேமொழி ஒண்டொடியாய் சொற்பயில் அவ்வி யயீபாவம்ஏனைத் துவந்தனெனக் கற்பவர் கூறும் சமாசன் களேதொகைக் கட்டளையே.’
‘அறுவகைத் தொகையும் அப்பொருள் படுமே ஆதலின் உருபு முதலிய அடைந்து நின்றுபயன் என்னெனின் நிகழ்த்தக் கேள்நீ தொக்குழி அப்பொருள் தோன்றியும் வேறோர் பொருளே தோன்றியும் பலபொருள் தோன்றியும் வரும்பின் இரண்டும் மயக்கங் கொடுக்கும் அத்தொகை இருவகை வழக்கினும் ஆகா கருதின பொருள் அறி கருவி யாக வருமே உருபு முதலிய விரியே.’ ‘தடுமா றுந்தொழில் தருந்தொகை சிலவே.’ ‘தொகைநிலை தொகாநிலை எனும்சொற் பொருளாள் மாறுபடு புலவர்கள் மூவர்கள் என்ப.’ ‘அறுவகைத் தொகையும் அறையுங் காலை ஒன்றே தொகுதலும் பலவே தொகுதலும் ஆறு வகையும் அடங்கத் தொகுதலும் உருபே தொகுதலும் பொருளே தொகுதலும் உருபும் பொருளும் ஒருங்கே தொகுதலும் உருபும் பொருளும் ஒருங்குபல தொகுதலும் பொருளும் உருபும் பொருளும் தொகுதலும் முதல்இடை கடையென மூன்றினும் தொகுதலும் கடைஇடை இரண்டினும் காணத் தொகுதலும் ஆதியாப் பலவும் அறைந்தனர் புலவர்.’ | நே.சொல்.61
நன்.362
பி.வி.20
இ.கொ.92 93
94
97 |