| ‘உவமப் பொருளின் உற்றது உணரும்.’ ‘சுட்டிக் கூறா உவமம் ஆயின்’ ‘உவமப் போலி ஐந்தென மொழிப’ ‘வேறுபட வந்த உவமத் தோற்றம்’ ‘வேற்றுமைத் தொகையே உவமத் தொகையே’ | 295 282 299 307
தொ.சொல்.412 |
என யாண்டும் தொல்காப்பியனார் உவமம் என்ற சொல்லாலேயே குறிப்பிட்டிருத்தல் உளங்கொளத்தக்கது.இந்நூற்பாச் செய்திகள் யாவும் சேனாவரையர் குறிப்பிட்டனவேயாம். உவமைத் தொகைகள் யாவும் இரண்டாம் வேற்றுமை உருபும் பொருளும் உடன்தொக்க தொகையாகவும் அடங்கும் என்பதும். வடநூலார் உவமத்தொகை என்று ஒரு தொகை குறிப்பிடாமையும் உணரத்தக்கன. |
ஒத்த நூற்பாக்கள் |
| முழுதும் ‘உவமை விரியின் உவமைத் தொகையாம்’
‘உவம உருபிலது உவமைத் தொகையே.’
‘போலப் புரைய ஒப்ப உறழ மானக் கடுப்ப இயைய ஏய்ப்ப நேர நிகர அன்ன இன்ன என்பவும் பிறவும் உவமத்து உருபே.’ | தொல்.சொல்.414
நே.சொல்.62
நன்.366, மு.வீ.ஒ.98
நன்.367 |
வினைத்தொகை |
338 | வினையின் தொகுதி காலத்து இயலும். | |
இது வினைத்தொகை ஆமாறு கூறுகின்றது. இ-ள்: முதல்நிலைவினை பிறிது ஒரு சொல்லொடு தொக்க தொகை காலத்தின்கண் நிகழும் என்றவாறு. |