பிரித்தால் தொகைப்பொருள் சிதையும் என்று தொல்காப்பியனாரும் இவ்வாசிரியரும் கூறியதன் காரணம் இதுவே. பண்புத்தொகையும் பிரித்தால் தொகைப்பொருள் சிதைதலின் வினைத்தொகைபோலப் பிரிவுஇல்ஒட்டாம்.வினைத்தொகையை வேறு சொல்கொண்டு விரிக்குங்காலை பெயரெச்சப் பொருளவாய் நின்று மூன்று காலமும் காட்டும் என்பதாம். நன்னூலார் ‘காலம்.........வினைத்தொகை’ என்றார் ஒருகாலத்திற்குரிய பெயரெச்சம் தொக்கவழி மூன்று காலமும் காட்டு ஆற்றல் பெறுதல் இயலாது ஆதலின் அவர் கூறுவது பொருந்தாது என்றார் இவர். உரைச்செய்திகள் சேனாவரையத்தை ஒட்டியன. வடநூலார் வினைத்தொகையை உவமத்தொகைபோலத் தொகைச் சொற்களின் வகைகளுள் சேர்க்கவில்லை என்பதுஉம் உளங்கொள்க. |