சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-45657

நுலிப் பின்தொக்கவழிக் குணச்சொல் குணம் உடையதனை உணர்த்தலான் இன்னதுஇது
என ஒன்றனை ஒன்று விசேடித்து இருசொல்லும் ஒருபொருள்மேல் வரும் இயல்புடைய
எல்லாத் தொகைச்சொல்லும் பண்புத்தொகையாம் என்றவாறு.

‘நுதலி’ என்னும் சினவினை ‘வரூஉம்’ என்னும் முதல் வினையோடு முடிந்தது.
‘இயற்கை’ என்றது தொக்குழிப் பண்பு உடையதனைக் குறித்தல் அத் தொகைச் சொல்லது
இயல்பு என்பது அல்லது காரணம் கூறப்படாது என்றவாறாம், தொகைக் கண் அல்லது
அச்சொல் அப்பொருள் உணர்த்தாமையின் பண்புத் தொகையும் வினைத் தொகைபோலப்
பிரிக்கப்படாதாம்.

வரலாறு: கருங்குதிரை என்பது வண்ணப்பண்பு, வட்டப்பலகை என்பது வடிவு;
நெடுங்கோல் என்பது அளவு; தீங்கரும்பு என்பது சுவை.

‘அன்னபிறவும்’ என்றதனால், மெல்லிலை- நல்லாடை- நுண்ணூல்- பராரை-
வெந்தீ- தண்ணீர்- நறும்பூ- என்னும் தொடக்கத்தனவும் கொள்க.

அவை கரியதாகிய குதிரை- வட்டமாகிய பலகை-எனப் பண்புடைப் பொருளே
குறித்தலான், இருசொல்லும் ஒரு பொருளவாய் இன்னது இது என ஒன்றை ஒன்று
பொதுமை நீக்கியவாறு காண்க. பிறவும் அன்ன.

அஃதேல் கரியது ஆகிய குதிரை, வட்டம் ஆகிய பலகை என்பன
அத்தொகையின் விரியாகலின் பண்புத் தொகை பிரிக்கப்படாது என்றது என்னையெனின்,
அற்றன்று; தொகைப் பொருள் உணர்த்துதற்குப் பிறசொல் கொணர்ந்து விரித்தது
அல்லது தம் சொல்லான் விரியாமையின