ஆயினும்; சூத்திரம் ஆதலின் உயர்சொல் இடைச்சொல் உரிச்சொல் எனவே அமையும், கிளவி என்பது மிகையானும், இன்னோரன்ன அமைவு உடைய என்பது உணர்த்துதற்கு ஆசிரியர் அவ்வாறு ஓதலின் அமைவுடைத்து என்க. |
| இனி இவ்வாறன்றிப் ‘பண்பை விளக்கும் மொழிதொக் கனவும் ஒருபொருட்கு இருபெயர் வந்தவும் குணத்தொகை’ |
நன்.365 |
எனக் கூறுவாரும் உளராலோ எனின், அற்றன்று; கருமைக் குதிரை என்பது மகரஐகாரம் தொக்குக் கருங்குதிரை என நின்றதேல், அது கருமைக் குதிரை என விரிதல்வேண்டும். அங்ஙனம் விரிந்தவழி வேற்றுமைத்தொகை ஆவது அல்லது பண்புத்தொகைவிரி ஆகாமையின், வேற்றுமைத் தொகைநின்று பண்புத்தொகையாய்த் தொகுமாறு யாண்டும் இன்று ஆகலின், கரு என்னும் முதல்நிலைப்பண்பு குதிரை முதலிய பெயரொடு தொக்க தொகைமை ஆற்றலான் ‘இரு தினை மருங்கின் ஐம்பாற் பொருளையும்’- சுட்டி இன்னது இது என ஒன்றனை ஒன்று விசேடித்து இருசொல்லும் ஒரு பொருள்மேல் வரும் இயல்பை உடையனவே பண்புத்தொகை என்பது பொருத்தம் உடைத்து என்க. 45 |
விளக்கம் |
வண்ணம் வடிவு அளவு சுவை என்பன பண்பின்வகை. இன்னது இது- முதற்சொல் அடைமொழி; இரண்டாம்சொல் அடைகொளி. செந்தாமரை என்புழிச் செம்மை தாமரையை விசேடித்து அச்செம்மையில்லாத வெண்டாமரையின் அதனைப் பிரித்தது. தாமரை என்பதும் ஏனைய பொருள்களில் உள்ள செம்மையிலிருந்து தன்னிடத்து உள்ள செம்மையைப் பிரித்தது. இவ்வாறு ஒன்றனை ஒன்று விசேடித்தல் காண்க. |