உலக நடையில் எதனையும் விளக்கிச்சொல்லுதல் வேண்டும் என்பது பற்றிச் சாரை என்றே ஒழியாது சாரைப்பாம்பு என்று விளக்கிக் கூறுகின்றனர். செய்யுட்கண்ணும் சிறுபான்மை இடைச்சொற்கிளவி என்றாற்போல மிகைச்சொல் என அமைத்தலும் உண்டு. நன்னூலார் கூற்று மறுக்கப்படுகிறது. நன்னூலார் வாமனன் சினேந்திரன் செய்த சத்தநூல் பற்றிக் கூறினார் என்பர் பிரயோக விவேக நூலார் (பி.வி. 49 உரை) கருமை+குதிரை என்பன கருமைக் குதிரை என்றே புணரும். அது இரண்டாம் வேற்றுமை உருபும் பொருளும் உடன்தொக்க தொகை; வேற்றுமைத்தொகையே பண்புத்தொகையாம் என்ற விதியின்று. ஆதலின் பண்புப்பகுதி பெயரொடு தொக்க தொகையாற்றலால் இருதிணை ஐம்பாற் பொருளை உணர்த்தலே பண்புத்தொகை என்ற தொல்காப்பியனார் கருத்தே ஏற்புடைத்து. நன்னூல் மறுப்பு நீங்கலான ஏனைய யாவும் இவ்வாசிரியர் சேனாவரையரைப் பின்பற்றி உரைத்தனவே. இனிப் பிரயோக விவேக நூலார், “கர்மதாரயன் என்னும் பண்புத்தொகைக்குப் பண்பு வேறொரு லிங்கமாய் நின்றாலும் பண்புடைப் பொருள் எந்த லிங்கமாம் அந்த லிங்கமாக்கிப் புணர்த்துவர் ஆதலின், அடையாக நின்ற குணலிங்கத்தை அநித்திய லிங்கம் என்பர். எடுத்துக்காட்டாகக் கருஞ்சாத்தன், சாத்தி, சாத்தர், குதிரை, குதிரைகள் என்பனவற்றைப் பொருள் விரிக்குங்கால் என்ற பண்பின் முதனிலையைக் கரியன்- கரியள்- கரியர்- கரியது- கரியன- என ஈறு திரித்து வருமொழி எந்த லிங்கம் எந்த லிங்கமாக்கித் தொகுப்பர் என்பது பற்றித் தொல்காப் பியனாரும் ‘ஐம்பால் அறியும் பண்பு தொகுமொழி’ (தொல்.482) என்றும், குணச்சொல் குணமுடையதனை உணர்த்துங்கால் |