சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

662 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

கால் ஒன்றனைஒன்று விசேடித்து இருசொல்லும் ஒரு பொருள் மேல்வருமிடத்து ‘இன்னது
இதுஎன வரூஉம் என்றும் பண்புத்தொகைச் சூத்திரம் செய்தது நேரே காண்க, கரியன்
சாத்தன் எனச் சாமானிய லிங்கமாகவும் விரிப்பர். இவையெல்லாம் குணங்கள் குணிகளை
விசேடித்து நின்றன. இவ்வுரை சேனாவரையர் உரை.

கருங்குதிரை என்பதனைக் கரியது குதிரை- கரிது குதிரை- என விரித்தால்
எழுவாயும் பயனிலையும் ஆவது அல்லது தொகை ஆகாது என்று மறுத்த நன்னூலார்
கூறியவண்ணம் கருமைசெம்மை என்பனவற்றொடு புணர்ந்தது அன்றோஎனின், அவர்
வாமனன் சினேந்திரன் செய்த சத்த நூல்பற்றி அவ்வாறு கூறுவர்’ (பி.வி.49 உரை)
என்றும், கர்மதாரயன் என்னும் பண்புத்தொகை.

முன்மொழிப்பண்பு- கருங்குவளை
                    இருமொழிப்பண்பு- பெருவெள்ளை
                    முன்மொழி விசேடியம்- தெய்வப்புலவன் திருவள்ளுவன்

முன்மொழி ஒப்பு- சங்குவெள்ளை
                    பின்மொழி ஒப்பு- அடிமலர்
                    முன்மொழி எண்ணம்- அருட்செல்வம்
                    முன்மொழித் தேற்றம்- கல்விப்பொருள்

என எழுவகைப்படும் என்றும் (பி.வி.22) கூறுவர். இதுவே முன்மொழி விசேடியம்
நீங்கலாக, வீரசோழிய நூலார் கருத்தும் (48) ஆகும். இவற்றை நோக்க, உவமத்தொகை
முன்மொழி ஒப்பு என்ற பண்புத்தொகையின் வகையாய் அடங்குதல் பெறப்படும்.
இலக்கணக்கொத்து நூலார் பண் புத்தொகை பற்றி விரிவாகக் கூறியுள்ளார்.

“வெண்கரும்பு என இனம்பற்றியும், வெண்டிங்கள் என இனம் பற்றாமலும்,
வெண்டாமரை எனத் தனக்குரிய சினையை விட்டு உரிமையில்லாத முதலைப்பற்றியும்,
வெள்ளாடு