சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-45663

என எதிர்வுபற்றியும், ‘விலங்கன்னர் வெள்ளறிவினார்’ என இழிவுபற்றியும், வெண்களமர்-
வெள்ளாளர்- எனச் சாதி பற்றியும், வெள்ளோட்டம் எனப் புதுமைபற்றியும், வெண்டேர்
எனப் பொய்பற்றியும், வெளிற்றுமரம் என உள்ளீடு இண்மை பற்றியும், ‘வெளியார் முன்’
என இயல்பு பற்றியும், இச்சோறு வெண்படி எனக் கலப்பின்மை பற்றியும், இவ்வுரு
மண்கலம் என ஒரு பெயரே பற்றியும், வெள்ளிடை எனத் தனிமை பற்றியும், இவ்வணி
வெள்ளைப்பொன் என நிறமின்மை பற்றியும், இவனுக்கு வெள்ளைப்புத்தி என மந்தம்
பற்றியும், இவ்வூரில் வெள்ளைப்பிள்ளையார் எனப் பண்புப் பொலி பற்றியும், இன்னும்
பலவாய் ஒரு பண்பே விரிதல் கான்க” என்பர் இலக்கணக்கொத்து நூலார். 98
 

ஒத்த நூற்பாக்கள்
 

  முழுதும்
‘முன்மொழிப் பண்பும் இருமொழிப் பண்பு மொழிந்தமைந்த
பின்மொழி ஒப்பொடு முன்மொழி ஒப்பும் பிணக்கொன்றிலா
முன்மொழி நற்கருத் தும்முன் மொழிநற் றுணிவும்என
நன்மொழி யார்கன்ம தாரயம் ஆறென்ன
நாட்டினரே.’

‘...............பண்பும் இரு பேரொட்டும்
தோன்று மேல் பண்புத் தொகை.’

‘பண்பை விளக்கும் மொழிதொக் கனவும்
ஒருபொருட்கு இருபெயர் வந்தவும் குணத்தொகை.’

‘முன்மொழிப் பண்புஇரு பண்பு விசேடியம் முன்மொழிதல்
முன்மொழித் துல்லியம் பின்மொழித் துல்லியம் மொய்குழலாய்
தொல்.சொல்.416




வீ.சோ.48


நே.சொல்.62



நன்.365