சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

664 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்


 
முன்மொழிச் சம்பா வனைஅவ தாரணம் முற்றும்இவை
நன்மொழிப் பண்புத் தொகைக்கர்ம தாரயன் நற்றமிழ்க்கே,

‘பண்புத் தொகைவிதி பகரின் பெருகும்
ஆயினும் சிலவிதி அறைகுவன் கேள்நீ
பண்புமூன் வருதலும் இருபண்பு அடுத்தலும்
இருபண் பொடுபொருள் இயைதலும் அவ்விரு
பண்புகள் தாமே பொருளை விளைத்தலும்
இயற்பெயர் சிறப்புப் பெயர்மா றுதலும்
பொதுச்சிறப் புப்பெயர் முறையே பொருந்தலும்
பின்மொழி ஆகு பெயராய்ப் பிறத்தலும்
முன்மொழி ஆகு பெயராய் முடிதலும்
இருமொழி ஆகு பெயராய் இருத்தலும்
ஒருபொருட்கு இருபெயர் ஆகி ஒட்டலும்
முற்பதம் தமிழ்மொழி முற்பதம் வடமொழி
இருபதம் தமிழ்மொழி இருபதம் வடமொழி
ஆகி வருதலும் ஆதியாப் பலவே.’

‘வண்ணம் சுவையே வடிவே அளவே
என்பவும் பிறவும் இதன்குணம் நுதலி
வரூஉம் இயற்கை பண்பின் தொகையே.’


பி.வி.22













இ.தொ.98



மு.வீ.ஒ.97
 

உம்மைத்தொகை
 

340 இருபெயர் பலபெயர் அளவின் பெயரே
எண்ணியல் பெயரே நிறைப்பெயர்க் கிளவி
எண்ணின் பெயரோடு அவ்வறு கிளவியும்
கண்ணிய நிலைத்தே உம்மைத் தொகையே.
 

 

இஃது உம்மைத்தொகை ஆமாறு கூறுகின்றது.

இ-ள் இருபெயர் முதலாகச் சொல்லப்பட்ட அவ்வறுவகைச் சொல்திரளையும்
தனக்குச் சார்பாகக் குறித்து