நிற்கும் உம் என்னும் இடைச்சொல்தொக, அதன் பொருள் தொக்க தொகை உம்மைத் தொகையாம் என்றவாறு.
வரலாறு: உவா அப்பதினான்கு என்பது இருபெயரான் ஆய உம்மைத்தொகை. புலிவிற்கெண்டை என்பதுபலபெயரான் ஆய உம்மைத் தொகை. தூணிப்பதக்கு என்பது அளவுப்பெயரான் ஆய உம்மைத்தொகை. முப்பத்துமூவர் என்பது எண்ணியற்பெயரான் ஆய உம்மைத்தொகை. தொடியரை என்பது நிறைப்பெயரான் ஆய உம்மைத்தொகை. பதினைந்து என்பது எண்ணுப்பெயரான் ஆய உம்மைத்தொகை.இனி அவை விரியுங்கால், உவாவும் பதினான்கும், புலியும் வில்லும் கெண்டையும்- தூணியும் பதக்கும்- முப்பதின் வரும் மூவரும்- தொடியும் அரையும்- பத்தும் ஐந்தும்- என விரியும். வேற்றுமைத்தொகை முதலாயின பல சொல்லால் தொகுதல் சிறுபான்மை; அதனான் உம்மைத்தொகை இருசொல்லானும் பலசொல்லானும் ஒப்பத்தொகும் என்பது அறிவித்தற்கு ‘இருபெயர் பலபெயர்’ என்றார். கற்சுனைக்குவளை இதழ்- பெருந்தோட்பேதை- எனப்பிற தொகையும் பெரும்பான்மையும் பல சொல்லால் தொகுதலோ எனின், அற்றன்று; கற்சுனைக்குவளை என்னும் தொகை ஒருசொல்லாய், பின், இதழ் என்பதனொடு தொக்குக் |