சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-46667

விளக்கம்
 

உம்மைத் தொகை இருபெயர் உம்மைத்தொகை, பல பெயர் உம்மைத்தொகை என
இருவகைத்து இருவகையவும் அளவுப் பெயர்- உயர்திணை எண்ணியற் பெயர்,
நிறைப்பெயர், எண்ணுப்பெயர் என்ற பொருண்மைகளில் வரும் என்பது.

‘கற்சுனைக் குவளை இதழ்’ என்ற தொடரில்,
                    கல்+ சுனை- கற்சுனை- ஏழன்தொகை.
                    சுனை+ குவளை- சுனைக்குவளை- ஏழன்தொகை
                    குவளை+ இதழ்- குவளைஇதழ்- ஆறன்தொகை

எனவே ஏழன்தொகையாய்ப் புணர்ந்தன இரண்டும் தொக்குக் கற்சுனைக் குவளை
எனஒருசொல் நீர்மையவாய்ப் பின் இதழ் என்பதனொடு தொகுதலின், இறுதிக்கண்
தொகுவன
இருபெயரேயாம் என்க.

பெருந்தோட் பேதை என்ற தொடரில்,
                    பெரு+தோள்- பெருந்தோள்- பண்புத்தொகை.
                    தோள்+ பேதை- இரண்டன்தொகை.

பெருந்தோள் ஒருசொல் நீர்மைத்தாய்ப் பேதை என்பதனொடு தொகுதலின்,
தொகுவன இருபெயரேயாம்.

ஆகவே, ஏனைத்தொகைகள் தொகுமிடத்து இருபெயர்த்தொகையாகவே
கொள்ளப்படும்.

‘புலிவிற் கெண்டை’ என்ற தொடரில் புலி-வில்-கெண்டை- என்ற மூன்று பெயரும்
வேறு தொடர்புஇன்றி உம்மைத்தொகை படவே தொகுதலின் பலபெயர் தொக்கனவேயாம்
ஆகவே, உம்மைத்தொகை ஒன்றற்கே இரண்டிறந்த பலபெயர் தொகும் நிலை உண்டு
என்பது விளக்கப்பட்டது. தூணிப்பதற்கு என்பதனைக் கலனும் தூணிப்பதக்கும்