என்னும் பொருள்படக் காண்க. பிறவும் அன்ன. எனவே இவை இருபெயர் தொக்கன எனவே கொள்ளப்படும்.உம்மைத்தொகை எண்ணும்மைப் பொருள்படத் தொகும் என்பது விளக்கப்பட்டது. எண்ணின்கண் வரும் இடைச்சொற்கள் ஏ, ஓ, உம் என என்று, எனா, என்றா, ஒடு- முதலியன. அவற்றுள் உம்மை ஒன்றுமே தொக்கு எண்ணுப்பொருள் தருவதாம். உம்மைத் தொகையை ஒருமையீற்றன பன்மையீற்றன என்று பொருள்படும் சமாகாரத் துவந்துவன், இதரேதரத் துவந்துவன் எனப்பகுப்பர் வீரசோழிய நூலார். (49). உவாஅப்பதினான்கு- சமாகாரத்துவந்துவன். கபிலபரணர்- இதரேதரத்துவந்துவன். “துவந்துவன் சமாகாரம் இதரேதரயோகம் என இருவகையாம்; உம்மைவிரி சமுச்சயமும் அன்வாசயமும் என இரு வகைப்படும்”.- பி.வி. 23 உரை “ஒருமை ஈறாய் வந்த அஃறிணை உம்மைத்தொகையைச் சமாகாரத் துவந்துவன் என்றும், உயர்திணைப் பன்மை ஈறாய் வந்த உம்மைத்தொகையை இதரேதரத் துவந்துவன் என்றும், ஒருமையீறு காடு என்னும் ஒருபெயர்ப் பொதுச்சொல் போல் என்றும் ஏகவற்பாவி போல் என்றும், பன்மையீறு மரங்கள் என்னும் சொல் போல் என்றும் அநேகவற் பாவி போல் என்றும் திருட்டாந்தமும் கூறுவர். உ-ம்: அறம்பொருள்- புலிவிற்கெண்டை- என்றும், கபிலபரணர்- சேர சோழ பாண்டியர்- என்றும் இருதிணையினும் இருவகை மொழியினும் சமாகாரமும் இதரேதரமும் முறையே வரும். “நம்பியும் வந்தான் என்றால், நங்கையும் வந்தாள் எனப் பொருள் பட்டு இருபெயரும் ஒருவினை கொள்ளும் எச்ச உம்மையைச் சமுச்சயம்’ என்பர். நம்பி உழுதும் |